நான் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்களை சூறையாடியிருந்தால் தவறாக சம்பாரித்து இருந்தால் என்னை சுட்டுக்கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் மோசடி விசாரணை பிரிவில் நேற்று விசாரணைக்கு முன்னிலையாகியப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எனக்கு உயிருக்கு பயமில்லை. நான் கையெழுத்திட்டு மலையக மக்களுக்கு வாங்கி கொடுத்த சம்பளமே தற்போதும் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் 2150 ரூபாய் வாங்கிதருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.