“எனக்கு 6 மொழிகள் தெரி​யும்” – ராஷி கன்னா பெரு​மிதம்!

0
42

நடிகை ராஷி கன்னா, தனக்கு 6 மொழிகள் தெரி​யும் என்று பெருமைபடக் கூறி​னார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்​கமறு’, ‘திருச்​சிற்​றம்​பலம்’, ‘அரண்​மனை 4’, ‘சர்தார்’ உள்பட சில படங்​களில் நடித்​துள்ள இந்தி நடிகையான ராஷி கன்​னா, தெலுங்​கு, மலை​யாளப் படங்​களி​லும் நடித்து வரு​கிறார். அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

மொழிகளைப் படிப்​பது எனக்​குப் பிடிக்​கும். அதை ஒரு வேலை​யாகச் செய்து வரு​கிறேன். இந்​தி, ஆங்​கிலத்தை அடுத்து தெலுங்​கு, தமிழ் மொழிகளை நன்​றாகப் பேசுவேன். இப்​போது பஞ்​சாபி​யும் பேசக் கற்​றுள்​ளேன்.

கொஞ்​சம் பெங்​காலி​யும் தெரி​யும். ஒவ்​வொரு மொழியிலும் சிறந்த கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்டும் என்​பது விருப்​பம். அதனால் கதா​பாத்​திரங்​கள்​தான் முக்​கி​யம். அங்கு மொழி இரண்​டாம் பட்​சம்​தான் என்றாலும் பார்​வை​யாளர்​களு​டன் தொடர்பு கொள்ள அம்​மொழியைக் கற்​றுக்​கொள்​வது அவசி​யம் என நினைக்கிறேன். அதனாலேயே எந்த மொழி​யில் நடித்தாலும் அதைக் கற்​றுக்​கொள்​கிறேன்.

பவன் கல்​யாண் ஹீரோ​வாக நடிக்​கும் ‘உஸ்​தாத் பகத்​சிங்’ படத்​தில் நடிக்க வாய்ப்பு வந்​த​போது, கதை கேட்​காமல் ஒப்​புக்​கொண்​டேன். பவன் கல்​யாணுக்​காக ஏற்​றுக்​கொண்​டேன். அதன் படப்​பிடிப்​பில் ஏராள​மான ரசிகர்​கள் ‘பவனிஷம்’ என்று எழு​தி​யிருந்த டிஷர்ட் அணிந்​து​கொண்டு வந்​தனர். அவருடைய தீவிர​மான ரசிகர் பட்டாளத்​தைக் கண்டு வியந்​தேன்.

ஒவ்​வொரு​வரும் சிறந்த படத்​தைக் கொடுக்க வேண்​டும் என்​று​தான் சினி​மாவில் உழைக்​கிறார்​கள். அனை​வரும் இந்​திய சினி​மாவுக்கு சிறந்த பங்​களிப்பை வழங்கி வருகிறார்​கள். அதனால், பல்​வேறு மொழிகளில் பணியாற்றி​னாலும் எந்த வித்​தி​யாசத்​தை​யும் நான் பார்க்க​வில்​லை. யாருடன் நடிக்க விரும்​பு​கிறீர்​கள் என்று பலரும் கேட்​கிறார்​கள்.

ரன்​பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்​தி​யாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்​கிறார்​கள். அவர்​களு​டன் நடிக்க வேண்​டும் என்ற ஆசை இருக்​கிறது. இயக்​குநரைப் பொறுத்​தவரை சஞ்​சய் லீலா பன்​சாலி தனது படங்​களில் பெண் கதா​பாத்​திரங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்பவர். அவர் இயக்​கத்​தில், குறிப்​பாக ஒரு பாடலிலாவது நடிக்க வேண்​டும் என நினைக்​கிறேன். இந்த லிஸ்ட்​டில் ரிஷப் ஷெட்​டி, ராஜமவுலி ஆகியோ​ரும் இருக்​கிறார்​கள். இவ்​வாறு ராஷி கன்னா தெரி​வித்து​ உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here