எனது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

0
215

நாட்டில் ஜனாதிபதி தெரிவு நாடாளுமன்றத்தினூடாக இடம்பெற இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமானவர்கள் ஜனாதிபதியாக வரவேண்டுமென கூறி வருகின்றனர்.ஆனால் எனது முடிவில் எவ்வித மாற்றமும் கிடையாது நான் முடிவெடுத்தது எடுத்ததுதான் அதில் பின்வாங்கப்போவதில்லையென பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மலையக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களோடு மக்களாக களத்தில் இருப்பவன் நான்.மக்களின் எண்ணமே எனது எண்ணமும் இந்நிலையில் ஜனாதிபதி தெரிவில் தனது ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிதலைவர் என்ற ரீதியில் சஜித் பிரேமதாஸவிற்கே காணப்படும் அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.மக்களின் எண்ணங்களும் தற்போது அவ்வாறே காணப்படுகின்றது.

இருந்தாலும் ஜனாதிபதி தெரிவில் வாக்களிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருவரை தெரிவு செய்தாலும் அதை தான் வரவேற்பதாகவும் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தால் தானும் ஆதரவளிப்பதாகவும் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here