எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் விலகுவதற்கு இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த சங்கம் இதனைத் தெரிவித்தது.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணையாக போக்குவரத்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே இவ்வாறு எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.