எலான் மஸ்க் கட்சியின் முக்கிய பொறுப்பில் இந்தியர்!

0
12

தொழிலதிபர் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ள ‘அமெரிக்க பார்ட்டி’ என்ற அரசியல் கட்சியின் பொருளாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா, என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, எலான் மஸ்க், அமெரிக்கக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

டெஸ்லாவின் நிதித்துறைத் தலைவராக செயற்படும் வைபவ் தனேஜா, டில்லி பல்கலையில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.

மேலும் பட்டய கணக்காளராகவும் அவர் உள்ளார். டெஸ்லா நிறுவனத்தில், அவரது சிறந்த நிதி ஆளுமையே, அமெரிக்கக் கட்சியின் முக்கிய பொறுப்பு, அவருக்கு வழங்கப்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here