அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.
இன்றைய தினம் அக்குரணை பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.