ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

0
135

இந்த வருட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள 2 ஆயிரத்து 959 பரீட்சை மையங்களில் இந்த பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைக்கான அனுமதி பத்திரங்கள் நேற்றைய தினம் அதிபர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here