ஐந்து பசுமாடுகள் 02கன்று குட்டிகளுடன் இருவர் கைது- நோர்வூடில் சம்பவம்

0
135

ஐந்து பசுமாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளுடன் இரண்டு சந்தேக நபரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
நோர்வூட் பகுதியில் இருந்து வவுனியா பகுதிக்கு லொறிவண்டி ஒன்றில் முறையான அனுமதி பத்திரங்கள் இன்றி கொண்டு சென்ற போதே 11.10.2018.வியாழக்கிழமை இரவு 09மணி அளவில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். ஜமில் தெரிவித்தார்

அட்டன் தலைமையக பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது நோர்வூட் பகுதியில் இருந்து வந்த லொறிவண்டியினை பரிசோதனையில் ஈடுபடுத்தபட்ட போதே குறித்த ஐந்து
பசுமாடுகளும் இரண்டு கன்றுகுட்டிகளை இனங்கண்ட பொலிஸார் அனுமதி பத்திரத்தினை பரிசோதித்த போதே குறித்த அனுமதி பத்திரங்கள் முறையானதாக இருக்கவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

இதேவேலை இந்த கால்நடைகள் வவுனியா பகுதியில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பண்ணை ஒன்றுக்கு கொண்டு செல்லபட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஐந்து பசுமாடுகள் இரண்டு கன்றுகுட்டிகளை மீட்ட அட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் 12.10.2018.வெள்ளிகிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here