ஐபிஎல் தொடரால் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்துவிட்டது – பீட்டர்சன் ஆதங்கம்!

0
2
dailythanthi

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர் கெவின் பீட்டர்சன். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற பீட்டர்சன், எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான அவர், 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014-ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டினார். தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், ஆர்சிபி டெல்லி உள்ளிட்ட 5 ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.இந்த நிலையில், ஐபிஎல் தொடரால் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக, யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் கூறியதாவது:“நான் பெரிய தியாகங்கள் செய்தேன். அதனால் தான் என் கரியரை இழந்தேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்த அனைவரும் எனக்கு எதிராக சென்றார்கள். நான் 33 வயதில், 104 டெஸ்ட் போட்டிகளோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. நான் 150–160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12,000–13,000 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அங்குள்ள பத்திரிகைகளை பயன்படுத்தி என்னை குறிவைத்தது. அதைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. அது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது நான் மிகவும் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறேன்,” என்றார்.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அந்த ஆண்டில் டிமிட்ரி மாஸ்கெரினஸ் மட்டுமே விளையாடினார். 2009-ஆம் ஆண்டு, மூன்று வாரங்களுக்கு மட்டுமே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎலில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பீட்டர்சன் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இதுவே அவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஐபிஎல்லுக்கு முன்னுரிமை அளித்ததால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தன்னிடம் நெருக்கடி ஏற்படுத்தியது. அதன் விளைவாக தனது கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்சன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here