பொகவந்தலாவை எச்.என்.பி வங்கியில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொதுசுகாதார பிரிவிற்குட்பட்ட மேற்படி வங்கியில் வேலை செய்த இருவருக்கு இலேசான காய்ச்சல் இருந்ததையடுத்து மேற்படி இருவரும் சோதனை செய்து பார்த்ததில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கடமைப்புரியும் சக ஊழியர்களுக்கு அன்டிஜன் சோதனை செய்ததில் மேலும் மூவருமாக மொத்தமாக ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய அறுவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.