முல்லைத் தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஹர்த்தால் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.