முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை இரும்பு சேகரிப்பதற்காக அழைப்பித்த இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாக்குதல்களிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்தபோதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.