இன்று பாராளுமன்றம் சென்றுள்ள உதயகுமார் கிடைத்த பாராளுமன்ற உறுப்புரிமைக்காக மக்களுக்கு நன்மை செய்வது போல் பாசாங்கு காட்டி அறிக்கைகளை விட்டு தள்ளுகின்றார். ஆனால் அவர் வாயால் வடை சுடுபவரென மக்கள் நன்கு அறிந்துள்ளதாக இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் உதயகுமார் யாரென்பது மக்களுக்கு நன்கு அறிவர்.வெறுமனே மக்களின் வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றி பாராளுமன்றம் சென்று இன்று கையாலாக நிலையில் இருந்து கொண்டு உளறி கொண்டிருக்கின்றார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்பில் எவ்வித அறுகதையும் இன்றி விமர்சித்து கொண்டிருக்கும் உதயகுமார் தன் பாராளுமன்ற பதவிக்காக மக்களை ஏமாற்றியவர்.பலமுறை முயற்சித்து பலனளிக்காமல் அனுதாப வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற உதயகுமார் ஒரே தடவையில் அமோக வெற்றியீட்டி பாராளுமன்றில் கால் வைவெவ்வா இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்பில் விமர்சிக்க தகுதியற்றவர்.
கொரோனா ஊரடங்கின் போது எவ்வித அக்கறையும் இன்றி கொழும்பிலிருந்து மறைந்து வாழ்ந்த திகாம்பரமும், உதயகுமாரும் ஊரடங்கை தளர்த்திய பின்னர் மக்களோடு இருப்பதாக நாடகமாடுகின்றனர்.
ஆனால் ஜீவன் தொண்டமான் கொரோனா ஊரங்கின்போது தடுப்பூசி கிடைக்க வழிசமைத்து கொடுத்தது முதல் நிவாரணம் வழங்கியது வரை மக்களோடு மக்களாக நின்று சேவை புரிந்துள்ளார்.மக்கள் இனியும் ஏமாற தயாரில்லை இனி இ.தொ.காவின் சாம்ராஜ்யம் மட்டுமே மலையகத்தில் தொடரும்.என இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.