பொகவந்தலாவ கொட்டியாகலை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒன்றரை மாத குழந்தை ஒன்று அயலவர்களால் தாக்கபட்ட நிலையில் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பாலிஸார் தெரிவித்தனர்
இந்த தாக்குதல் சம்பவம் 22.06.2018.வெளளிகிழமை காலை 10.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த தோட்டபகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள இடம் பிரச்சினை வாய்தர்க்கமாக மாறி பின்பு அது மோதலாக மாறியதால் குறித்த குழந்தையின் தாய்க்கு தடியால் தாக்கி போது அந்த தாக்குதல் ஒன்றரை மாத கைகுழந்தையின் கால்பகுதியில் தாக்குதல் இடம் பெற்றதாகவும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த குழந்தையும் தாயும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தாக்குதல் சம்பவம் குறித்து வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ள குழந்தை தொடர்பில் பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எ.எஸ்.கே.ஜெயசூரியவிடம் வினவியபோது அவர் தெரிவிக்கையில் குறித்தை குழந்தைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும் குழந்தை குறித்து பயப்படவேண்டி அவசியம் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யபட்ட மூன்று சந்தேக நபர்களையும் 23.06.2018.சனிகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)