யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார். பரம்பொருள் படத்தின் முதல் பாடலான “அடியாத்தி” பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும், ”பரம்பொருள்” திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான “அடியாத்தி” பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.
இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.