ஒரே ஆண்டில் இரண்டு முறை கைதான நடிகர் ரஜினிகாந்த்

0
150

1979ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட பழைய தகவல் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.1979 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

படப்பிடிப்பு முடித்தவுடன் விமான நிலையத்திற்கு மதுபோதையில் சென்று இருக்கிறார். அப்போது அவருக்கும் நண்பருக்கும் சண்டை ஏற்பட்டது.இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ரஜினியை கட்டுப்படுத்த முடியாததால் கண்ணாடி அறையில் இருக்க வைத்துள்ளனர்.

அப்போது ரஜினிகாந்த் கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.இதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த ஆண்டிலேயே வார பத்திரிகை ஒன்றில் சினிமா செய்தியாளராக இருந்த ஒருவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார்.ரஜினி தன்னை தாக்கியதாகவும், தன் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் அடிப்படையில் 1979ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார்.

அவரை ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்தனர். நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த இரண்டு கைது சம்பவங்களும் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நடந்ததால் இதற்கு அவர் தான் பின்னணி இருந்ததாகவும் அப்போது கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here