கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

0
203

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்றுகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.வவுனியா அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதால், பொதுமக்களின் போக்குவரத்தை குறைத்து சேவை பெறுவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here