கடுகண்ணாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு

0
44

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல  கடுகண்ணாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் கடந்த சனிக்கிழமை (22.11.25) ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சீரற்ற வானிலை காரணமாக உணவகம் ஒன்றிற்கு பின்புறத்திலுள்ள மலையொன்றில் இருந்த பெரிய கல்லொன்று சரிந்ததால் மண்சரிவு ஏற்பட்டது.

மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதிலும் அப்பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த
நிலையில் தற்போறு ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here