பிலிப்பைன்ஸில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் கல்வி அதிகாரிகள் இன்று(2) இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தலைநகர் மணிலாவிலுள்ள டசின் கணக்கான பாடசாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அங்கு 1915 மே 17 ஆம் திகதி 38.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியமையே சாதனையாக உள்ளது.இந்நிலையில், மணிலாவில் நாளை(2) புதன்கிழமை 43 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் பிரதான தீவான லுஸோன், தென் பகுதி தீவானா மின்டானோவா ஆகியவற்றில் பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அல்லது பாடசாலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.