கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.