கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு (கோப்) கணக்காய்வாளர் நாயகம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் அறிக்கையின் தமிழ்ப் பிரதிகளை தயாரிப்பதில் காட்டிய அசிரத்தை குறித்து கணக்காய்வாளர் நாயகத்துக்கும் தமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனை தொடர்பான குறித்த அறிக்கை 1251 பக்கங்களைக் கொண்டுள்ளது. குறித்த அறிக்கை தற்போது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.