கண்டி,பதுளை ஆகிய பிரதேசங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்க நடவடிக்கை

0
213

ஹட்டனில் அமையப்பெற்றுள்ள தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம் போன்று கண்டி,பதுளை ஆகிய பிரதேசங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்காக எனது அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில், நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக களந்துரையாடப்பட்டது.

இக்குழு கூட்டத்தில் கலந்துக்கொன்டு கருத்து தெரிவித்த போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்து, குடும்ப வறுமை சூல்நிலையால் பாடசாலைகளிலிருந்து இடைநடுவே விலகும் மாணவர்கள் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிச்சி நிலையத்தின் ஊடாக தொழில்சார் கற்கை நெறிகளை இலவசமாக கற்று தொழில் வாய்ப்பினைகளையும், சுயத்தொழில்களையும் மேற்கொள்ள முடியும் என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மேலும் வலப்பனை,கொத்மலை,ஹங்குராகெத்த ஆகிய பிரதேசங்களிளும் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதி குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்பதாக மக்களிடம் கையளிக்க எதிர்பார்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் எனது அமைச்சின் கீழ் இயங்கும் “பிரஜாசக்தி” செயற்றிட்டத்தின் கீழ் பல்வேறு திறன் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் பாடசாலைகளிலே இடைநடுவே விலகிய மாணவர்களும், க.பொ.த சாதாரன தரம் பயின்று வீட்டிலிருக்கும் மாணவர்களும் தொழில்சார் திறன் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 

 

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here