கண்டி இரஜவெல்ல இந்து தேசியக்கல்லூரியின் 113 வது பரிசளிப்பு விழா

0
175

கண்டி இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரியின் 113 வது பரிசளிப்பு விழா மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி கோகிலேஸ்வரியின் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சின் பிரஜாசக்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, பரிட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வில் பாடசாலை மட்டத்திலும், மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சாதித்த மாணவர்களுக்கு பரிசல்களும் அக்கல்லூரியில் கல்வி பயின்று பல துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here