கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி ரந்தோலி பெரஹரா!!

0
165

கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல வைபவத்தின் ரந்தோலி பெரஹர 21.08.2018 அன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகியது. 25.08.2018 அன்று வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு ரந்தோலி பெரஹராவின் வீதி உலா இடம்பெற்றது. புத்த பெருமானின் புனித பொருட்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த பெரஹராவை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டி நகருக்கு வருகை தந்து இதனை பார்வையிட்டுள்ளனர். அத்தோடு 25.08.2018 இரவு இடம்பெற்ற ரந்தோழி பெரஹராவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பார்வையிட்டார்.கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் பகல் பவனி 26.08.2018 அன்று இடம்பெறுகிறது. அதனைத்தொடர்ந்து கெற்றம்பே ஆற்றில் நீர்வெட்டு இடம்பெறும்.

எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி ரந்தோலி பெரஹரா 25.08.2018 அன்று இரவு இடம்பெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்பையும், சேமநலன் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இம்முறை உற்சவத்தை வெகு விமர்சையாக நடத்த முடிந்ததாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதியமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். பௌத்த மக்களும் ஏனைய சமயத்தவர்களும் வெளிநாட்டவர்களும் இந்த கண்டி எசல பெரஹரா தொடர்பில் விசேட கவனஞ் செலுத்தியுள்ளனர். இது இலங்கையின் நற்பெயரை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்ல மிகவும் துணை புரியும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இம்முறை எசல பெரஹரா வெற்றிகரமாக இடம்பெற்றது என எடுத்துக்காட்டும் குறிப்பேட்டை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 26.08.2018 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளார். பெரஹராவில் பங்கேற்ற கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் ஜனாதிபதி தலைமையில் வழங்கி வைக்கப்படும்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here