“நூறு நூறு” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மத்திய மாகாண தமிழ் கல்வி, இந்து கலாசார அமைச்சின் ஊடாக நூறு பாடசாலைகள், நூறு ஆலயங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண கண்டி மாவட்ட தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதிக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலைகளுக்கு தேவையான கணனிகள் பல்லூடக உபகரணங்கள்,டுப்ளோ இயந்திரம் புகைப்பட நகல் இயந்திரம் , மற்றும் வாசிகசாலைக்கான. அலுமாரிகள், கதிரைகள் வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண விவசாய, தமிழ் கல்வி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, விவசாய அமைச்சின் செயலாளர், மற்றும் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், திருமதி. சத்தியேந்திரா, கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், வலய கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள்,பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர், பழைய மாணவர்கள், அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்………..
(டி .சந்ரு)