கந்தப்பளை நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி.

0
205

நுவரெலியா – கந்தப்பளை நகரில் இயங்கும் சுப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து, குறித்த சுப்பர் மார்க்கெட் பூட்டப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான நபரை, நேற்று (17) மாலை, சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கந்தப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ. அமில தெரிவித்தார்.

அத்துடன், சுப்பர் மார்க்கெட் உரிமையாளருடன் தொடர்பு பேணிய அங்கு பணியாற்றும் 12 ஊழியர்கள் மற்றும் உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 15ஆம் திகதி முதல் குறித்த சுப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்த 40க்கும் அதிகமானோரின் விபரங்கள் திரட்டப்பட்டு,  (17) மாலை, அவர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறாக பொருட்கள் கொள்வனவில் ஈடுப்பட்ட 103 பேரின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அந்த வகையில் கந்தப்பளை நகரை அண்மித்த பகுதிகளான கல்பாலம், கொங்கோடியா, பார்க் தோட்டம், பூப்பனை, நோனா தோட்டம் மற்றும் எஸ்கடெல் ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கந்தப்பளையில், (17) மாலை வரை, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் நுவரெலியா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவரும் அடங்குவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here