கந்த சஷ்டி எப்படி இருக்க வேண்டும்? வரம் கொடுக்கும் விரதம்!

0
162

நவம்பர் 18ம் திகதி சனிக்கிழமை சூரசம்ஹாரமும், 19ம் திகதியான ஞாயிறு திருக்கல்யாணமும் நடைபெறும். கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது, எப்படி விரதம் இருக்க வேண்டும், விரதமிருப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கந்த சஷ்டி எப்போது தொடங்குகிறது?
இந்த அண்டு கந்த சஷ்டி நவம்பர் 13ம் திகதி தொடங்கி நவம்பர் 19ம் திகதியுடன் முடிவடைகிறது.

நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை முருக பெருமான் வேல் வாங்குதல், சூரபத்மனுக்கு தூது அனுப்புதல், போர் துவங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நாடக வடிவில் நடைபெறும்.

நவம்பர் 18ம் திகதி சனிக்கிழமை சூரசம்ஹாரமும், 19ம் திகதியான ஞாயிறு திருக்கல்யாணமும் நடைபெறும்.

கந்த சஷ்டி விரத முறைகள்
கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள பல முறைகள் உள்ளன. சிலர் ஆறு நாட்களும் வெறும் நீர் மட்டுமே அருந்தி சூரசம்ஹாரம் முடிந்த உடன் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பார்கள்.

சிலர் 6 நாட்களும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார்கள்.

சிலர் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது வழக்கம்.

சில 6வது நாள் சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதையும் சாப்பிடாமல் இருந்து மறு திருக்கல்யாணம் செய்து விரதம் முடிப்பார்கள்.

மேலும், சிலர் இளநீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள்.

வெறும் மிளகை மட்டும் சாப்பிட்டு மிளகு விரதம் இருக்கும் பக்தர்களும் உள்ளனர்.

கந்த சஷ்டி தொடக்க நாளில் ஒரு மிளகு, 2-வது நாளில் 2 மிளகு என 6-வது நாள் 6 மிளகு சாப்பிட்டு கடுமையான விரதம் மேற்கொள்வார்கள்.

கந்த சஷ்டி விரதப் பலன்கள்
ஆணவம், வன்மம், குரோதம், காமம் போன்ற தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் நமக்கு கிடைக்கும்.

கந்த சஷ்டி விழாவில் சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் வெற்றிக் கண்டது போல் இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் வரும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் அதன் உண்மையான அர்த்தம் சஷ்டியில் விரதம் இருந்தா அகப்பையான கருப்பையில் குழந்தை பேறு கிடைக்கும் என்பது தான்.

எனவே குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும்.

மேலும் 16 வகை செல்வங்களையும் முருகப்பெருமான் வழங்குவார்.

கந்த சஷ்டி விரதத்தில் என்ன செய்ய வேண்டும்?
விரத நாட்களில் கந்த சஷ்டி கவசம் படிப்பது, முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, திருப்புகழ் படிப்பது, ஓம் சரவண பவ என்று தினமும் 108 முறை எழுதுவது போன்றவற்றை செய்யலாம்.

முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து வாழ்வில் வெற்றியையும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here