ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி காணிகளை கையகப்படுத்துவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்தமையால் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஈரோஸ் அமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கெளரவ க.பேரின்பராஜா அவர்கள் கைது செய்யப்பட்டமை வன்மையாக கண்டிப்பதாக ஈரோஸ் அமைப்பின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்தின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்குறிப்பிடுகையில் கடந்த 30வருடயுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் சமூகமாகும் தற்போதுதான் அபிவருத்தி திட்டங்கள் தமிழ்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்களுடைய காணியை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அடாத்தாக அபகறிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ளமுடியாது. சமூகங்களிடையே பிரச்சினை ஏற்படும் போது அதை தடுத்து நிறுத்துவதற்கும் பிரச்சினை தொடர்பான அடிப்படையை தெரிந்துக்கொள்வதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆராயவேண்டியதும் மக்கள் பிரதிநிதியொருவரின் கடமையாகவும் அதை தவராக சித்தரித்து சில தனிநபர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல்களை உருவாக்குவதற்காக சூழலை ஏற்படுத்த முனையக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.