கனடா செல்ல தயாராகி வரும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!

0
178

கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படுவதாக தெரிவித்து பாரிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள, தங்களை புலம்பெயர்தல் சட்டத்தரணிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், கனடாவிற்கு புலம்பெயரும் எண்ணத்துடனிருப்பவர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு வேலை மற்றும் தங்குமிடம் ஆகியவை இணையத்தளம் வாயிலாக கிடைக்கும் என்று கூறும் செய்திகளை வெளியிட்டு வருவது, தாங்கள் மேற்கொண்ட விசாரணை ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளதாக The Tech Transparency Project (TTP) எனும் அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த இணையத்தளங்கள், பயனர்கள் இந்த விசா திட்டத்திற்குள் நுழைவதற்கு முன், முதலில் தங்கள் நண்பர்களுக்கு வட்ஸ் அப் வாயிலாக அழைப்பு விடுக்கவேண்டும் என கூறுகிறது.

அவ்வகையில், இந்த போலிச் செய்திகளை அவர்கள் தங்களுக்குத் தெரியாமலே தங்கள் நண்பர்களுக்கும் பரப்ப அது வழிவகை செய்கிறது.

ஆனால், அந்த இணையத்தளம், விசா குறித்தோ, கனேடிய புலம்பெயர்தல் குறித்தோ உண்மையான தகவல் எதையுமே கொடுப்பதில்லை.

பயனர்கள் கொடுக்கும் தங்கள் நண்பர்களின் தனிப்பட்ட தரவுகளை, அவர்கள் சந்தேகிக்காத வகையில் எடுத்துக்கொள்ளும் இந்த இணையத்தளம், அடையாள திருட்டுபோன்ற விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கனடா அரசும் இந்த மோசடி குறித்து மக்களை எச்சரித்துள்ளது.

அந்த எச்சரிக்கையில், கனடா அரசின் 2022ஆம் ஆண்டுக்கான அரசுப் பணிக்கு ஆட்கள் எடுப்பது தொடர்பில் போலியான செய்திகள் வட்ஸ் அப்பில் பரப்பப்படுவதாகவும், அப்படி ஒரு செய்தியை கனடா அரசு வெளியிடவில்லை என்றும், முன்பின் தெரியாத மூன்றாம் தரப்பினர் யாருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இந்த மோசடி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள The Tech Transparency Project (TTP) அமைப்பு, இத்தகைய போலிச் செய்திகளை அகற்றுமாறு அந்த சமூக ஊடக நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here