எதிர்வரும் 19 – 20 ஆம் திகதிகளில் கம்போடியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் மகாநாட்டில் கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் கலந்து கொள்ள உள்ளார்.
வே. இராதாகிருஷ்ணன், மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் மகாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
பண்ணாட்டு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புத் தலைவர் மரு.க. திருதணிகாசலம் தென்புலத்தார் அமைப்பின் நிறுவனர் ஓரிசா பாலு சீனிவாசராவ் தென்கிழக்காசியத் தமிழ் சங்க விசாகன் மைலாசலம் கம்போடிய தமிழர் பேரவை முத்தையா ராமசாமி ஆகியோர் மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்