கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்தி கருவை கலைத்த கணவருக்கு விளக்கமறியல்!

0
182

கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்தி கருவை கலைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவரை இன்று 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கொழும்பு 14 நவகம்புர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் வைத்திய அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக தெரிவித்ததையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குழந்தையின் தந்தை தொடர்பில் கணவர் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான கணவர் , மனைவியின் வயிற்றில் காலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மனைவி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனையின் போது இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here