இலவச கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவலை சட்ட மூலத்தை சுருட்டிக்கொள், இலவச கல்வி உரிமையை பறிக்காதே, விவாசாயிக்கு உரத்தை வழங்கு, நீதிக்கான போராட்டத்திற்கு தடைவிதிக்காதே, கொத்தலாவலை பல்கலை கழகத்தை இராணுவமயப்படுத்தாதே, தேசிய ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கு, ஆசிரியர்களை வஞ்சிப்பதை நிறுத்தி கொள், ஆசிரியர்களின் கடன் சுமைக்கு தீர்வை வழங்கு, ஆசிரியர்களை அவமானம்படுத்துவதை நிறுத்தி கொள், ஆசிரியர்களை தூற்றி பேச அமைச்சருக்கு தகுதியில்லை, ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை தவிர், விடுதலை செய்யப்பட்டும் தனிமைப்படுத்தி வஞ்சிக்கும் ஆசியர் சங்கத்தினரை உடனே விடிவித்து விடு என பல கோரிக்கைகளையும் கோசங்களையும் எழுப்பி நுவரெலியா நகரில் ஒன்றினைந்த ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் ஒன்றை (16) காலை முன்னெடுத்தனர்.
நுவரெலியா மத்திய தபால் நிலையத்திற்கு முன் காலை 10.30 மணியலவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சமூக அமைப்புகள்,ஆசிரியர் சங்கங்கங்கள்,வர்த்தக சங்கத்தினர்,சமூக நீதிக்கான அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வழு சேர்த்திருந்தனர்.
டி.சந்ரு