கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா!!

0
148

தனது அரசியல் வாழ்வில் 30 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டும் மலையக கல்வி உட்பட இலங்கையின் கல்வி வளர்சிக்கு கடந்த 22 வருடங்களாக செய்த சேவைக்கும் அண்மையில் இலண்டன் நகரில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் முன்னிட்டு கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் (05.08.2018) அன்று அட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஷ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலசந்திரன், மலையக மக்கள் முன்ணனியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் எஸ்.முரளிதரன், அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் வி. விஷ்வநாதன் புஸ்பா என கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலைஞர்கள், எழுத்தாளர்கள் என கௌரவிக்கப்பட்டதுடன், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

(க.கிஷாந்தன், எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here