ஆணைக்குழுவின் சார்பில் ஆராய பிரதம பொறியியலாளர் பி.ஜே. பிரேமதிலக்கவை நியமிப்பது பொருத்தமானது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
களனிவெளி புகையிரத பாதையை அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி ஊடாக ஓபநாயக்க வரையிலான புகையிரத பாதைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புகையிரத திணைக்களத்துடன் இணைந்து ஆணைக்குழுவொன்றை நியமிக்க ரயில்வே பொது முகாமையாளர் எஸ். குணசிங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவிசாவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான களனிவெளி ரயில் பாதை எதிர்வரும் 2030ஆம் ஆண்டு அரசாங்க காணித் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளபடி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவிசாவளை புகையிரத நிலையத்தில் 5 ரயில்களை நிறுத்துவதற்கு போதுமானதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிவெளி புகையிரத பாதை நீடிப்பு தொடர்பில் ஆணைக்குழுவின் சார்பில் ஆராய பிரதம பொறியியலாளர் பி.ஜே. பிரேமதிலக்கவை நியமிப்பது பொருத்தமானது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.