களுத்துறையில் மாணவி மரணம் | ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கைது!

0
155

களுத்துறையில் ஹோட்டலிலிருந்து வீழ்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண், மாணவி தங்கியிருந்த களுத்துறையில் உள்ள ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here