நாட்டில் நிலவுகின்ற தொடர் மழை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது