மலையகத்தில் தொடரும் மழை கால நிலை நீடிக்கின்றமையினால் மண்சரிவுகளும் நிழ தாழிறக்கமும் அதிகமாக காணப்படுகின்றது.
நீரேந்தும் பகுதிகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைகின்றது.
காசல்ரீ மவுசாகலை நீர்தேக்கங்களில் நீர்மட்டம் நேற்று பெய்த தொடர் மழையில் நிறம்பி வழியும் தருவாயில் இரண்டு அங்குளம் மாத்திரமே உள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்ததுடன், காசல்ரி நிர்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் வசிக்கும் காசல்ரீ ஓயா கரையோர பகுதிமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.