நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரி நீர்த்தேகத்தில் நிவ்வெளிகம பகுதியில் இன்று மாலை 3.00 மணியளவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சரத்குமார வயது 20 என்பவரெனதென பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் கரையோரத்தில் தொலைபேசியொன்றும் செருப்பும் இருப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து போலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பேது குறித்த நபர் நேற்று இரவு வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டினைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்தே சந்தேகம் கொண்ட பொலிஸார் நீர்த்தேக்கத்தில் தேடுதல் மேற்கொண்ட போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்