திரைத்துறையை சேர்ந்த சில நடிகைகளே அவரை ஒருதலையாக காதலித்தார்கள். தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன்.
தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அந்த காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
ஒரு காலக்கட்டத்தில் சினிமாவில் இருந்து மோகன் காணாமல் போனார்.
இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அண்மையில் அளித்த பேட்டியில், மோகனுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
திரைத்துறையை சேர்ந்த சில நடிகைகளே அவரை ஒருதலையாக காதலித்தார்கள்.
அப்போது அவருடன் நடித்த நடிகைகளில் ஒருவர், ” நான் உங்களை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் ” என அவர் பின்னாடியே அலைந்து தொந்தரவு செய்தார்.
ஒரு கட்டத்தில் வெறுப்புக்கு ஆளான மோகன் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கை நன்றாக செல்கிறது, இதெல்லாம் வேண்டாம் என தவிர்த்துள்ளார்.
இதையடுத்து மோகன் மீது ஆத்திரம் கொண்ட அந்த நடிகை, மோகன் பல நடிகைகளுடன் தவறான உறவில் இருந்து வருவதாகவும் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கட்டுள்ளார் எனவும் தகவலை பரப்பினார்.
அன்றிலிருந்து மோகனின் வாழ்க்கை அழிந்துவிட்டது. இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்கு மோகன் தள்ளப்பட்டார் என கூறியுள்ளார்.
செய்யாறு பாலு கூறும் அந்த நடிகை பூர்ணிமா தான் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மோகன் – பூர்ணிமா இருவரும் அந்த சில நாட்கள், விதி, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.