காது கேளாதோருக்கான 25-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மஹித் சந்து 456 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
முன்னதாக அவர் தகுதி சுற்றில் 585 புள்ளிகள் குவித்து தனது முந்தைய உலக சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். நடப்பு தொடரில் அவர் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.




