காத்தான்குடி கடற்கரை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

0
10

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை வீதி வழியாக பயணித்த முச்சக்கரவண்டி, பால்வட்தோடை அருகே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றது. விபத்தின்போது முச்சக்கரவண்டியில் சாரதி உள்ளிட்ட மூவர் பயணித்திருந்தனர்.

வீதி புனரமைப்பு காரணமாக பாலத்தின் திருத்தப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாலம் வழியாக வந்த முச்சக்கரவண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடைசாந்து பள்ளத்திற்குள் விழுந்தது.

சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, முச்சக்கரவண்டியை பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் முச்சக்கரவண்டி வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

இவ்விபத்தின்போது முச்சக்கரவண்டியின் உள்ளே இருந்த பயணிகள் சிலர் சிறிது காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், முச்சக்கரவண்டி பகுதியளவு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here