காத்திருந்த பகை.. 101 முறை கத்திக்குத்து! – ஆசிரியரை பழிதீர்த்த மாணவன்!

0
139

பெல்ஜியத்தில் தன்னை சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகள் கழித்து மாணவன் பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியத்தை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவெண்ட்ஸ். குண்டெர் தனது சிறுவயதில் மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியரிடம் படித்துள்ளார். அந்த சமயம் ஆசிரியர் மரியா, குண்டெரை மிகவும் அவமானப்படுத்தியதாகவும், தண்டனை வழங்கியதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் சிறுவன் குண்டெர் மனதில் ஆறாத காயமாக இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு மரியா வெர்லிண்டனை, குண்டெர் உவெண்ட்ஸ் தேடிக் கண்டுபிடித்து 101 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். ஆனால் மரியாவை கொன்றது யார் என இதுவரை தெரியாமல்தான் இருந்துள்ளது.

சமீபத்தில் குண்டெர் தனது நண்பரிடம் இதுபற்றி சொல்லியுள்ளார். அவரது நண்பர் இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து குண்டெரை கைது செய்து கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்த மாதிரிகளோடு அவருடையதை ஒப்பிட்டு பார்த்ததில் அவர்தான் கொலை செய்தவர் என போலீஸார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here