காற்றாலை மின் திட்டத்தால் பறவைகளுக்கு பாதிப்பில்லை என்கிறது அரசாங்கம்

0
12

மன்னாரில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை, நிராகரித்துள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி காற்றாலை மின் திட்டப் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான பழைய நிலம் என்றும் தெரிவித்தார்.

காற்றாலை மின் திட்டத்தால் பாதிப்புகள் ஏற்படுவதாக விமர்சிக்கப்படுவதை ஏற்க முடியாது. அந்தப் பகுதியில் பறவைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் கூற்றுகளும் ஆதாரமற்றவை.

மன்னார் காற்றாலை மின் திட்டப் பகுதியைப் பார்வையிட்டேன். மன்னாரிலிருந்து பூனகரிக்கு வடக்கே உள்ள பகுதியில்தான் இத்திட்டம் நிறுவப்பட்டுள்ளது. சமூகத்தில் உள்ள சில பிரிவினர் மன்னாரை ஒரு ‘சொர்க்கம்’ என்று சித்தரித்துள்ளனர்.

காற்றாலைகளால் அழகிய பகுதி அழிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மன்னாரிலிருந்து பூனகரிக்கு வடக்கே உள்ள பகுதி தரிசு நிலமாகும். மக்கள் பறவைகளைப் பற்றிப் பேசினாலும், அந்தப் பகுதியில் அப்படி எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here