மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபா வழங்கபட
வேண்டும் என கோரி பொகவந்தலாவ டின்சின் ஹட்டன் பொகவந்தலாவ
பிரதான வீதியை மறித்து தோட்ட தொழிலாளர்கள் 25.10.2018.வியாழகிழமை
ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
இந்த ஆர்பாட்டத்தின் போது மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்
ஆயிரம் ருபாவாக அதிகரிக்கபட வெண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால்
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கபட்ட ஆர்பாட்டத்தின் போது மலையக
இளைஞர்கள் தாக்கபட்ட பட்டமையை எங்களால் ஏற்று கொள்ள முடியாது எங்களின்
வாக்குகளை பெற்று நல்லாட்சியை அமைத்து கொண்ட இந்த அரசாங்கம் எங்கள்
பிள்ளைகளை கடுமையாக தாக்கியிருக்கிறது இதற்கு மலையக அரசியல் வாதிகள்
தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அர்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் இந்த நாட்டை பிரி;த்த கேட்கவில்லை எங்கள் இரத்தத்தை வியர்வையாக
நிலதத்திலே சிந்தி கஸ்டபட்டுதான் எங்களின் உரிமையை நாங்கள் போராடி
கேட்கிறௌம் ஆனால் இந்த அரசாங்கம் எங்களின் வாக்குகளை பெற்றுகொண்டு
பொலிஸாரை துhண்டிவிட்டு எங்களுக்கு நியாயமான சம்பளத்தை கேட்டு போராடிய
அப்பாவி இளைஞர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கியிருக்கிறார்கள்
தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவை இந்த
நல்லாட்சி அரசாங்கம் பெற்றுகொடுக்கவேண்டும் நாங்கள் மலையகத்தை பொறுத்தவரை
ஆறுமகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் பழனிதிகாம்பரம் ஆகியோரை நம்பிதான்
வாக்களித்தோம் ஆனால் இன்று எங்களின் உரிமைகள் பறிக்கபட்டு எங்களின்
பிள்ளைகளை கொழும்பில் கடுமையாக தாக்கபட்டுள்ளனர் எனவே இதற்கு மலையக
அரசியல் வாதிகள் தகுந்த நடவடி;கை பெற்று கொடுக்கபட வேண்டும் என
தெரிவிவத்னர்
இந்த ஆர்பாட்டத்தின் போது பொகவந்தலாவ மோரா தெரேசியா போனோகோட் சிங்காரவத்த
ரொப்கில் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)



