கித்துல்கல பகுதியில் 1500மில்லிகிராம் ஹோரோயினுடன் 05பேர் கைது!

0
166

மஸ்கெலியா விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது கித்துல்கல பகுதியில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேக நபர்களை 1500மில்லிகிராம் ஹோயினுடன் மஸ்கெலியா விஷேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.இவர்கள் 25.05.2018. வெள்ளிகிழமை கைது செய்யபட்டதாகவும் கைது செய்யபட்டவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கவண்டியையும் விஷேட அதிரடிபடையினர் கைபற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 24வயதுடையவர்கள் எனவும் இவர்கள் தொடர்ந்தும் இதுபோன்ற ஹோரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என விஷேட அதிரடிபடையினரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

STF (5)

கைது செய்யபட்ட ஐந்து சந்தேகநபர்களிடம் 27ஹோரோயின் பக்கற்றுகள் கைபற்றபட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் ஐந்து பேரும் கித்துல்கல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா விஷேடஅதிரடி படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 26.05.2018.சனிகிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கையினை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here