கினிகத்தேன விபத்தில் 10 யாத்ரீகர்கள் படுகாயம்

0
262

சிவனொளிபாதமலைக்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேணும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் வேன் மற்றும் பஸ்ஸில் பயணித்த 10 யாத்ரீகர்கள் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹாவிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வேனில் வந்த யாத்ரீகர்கள் குழுவொன்று திரும்பிக்கொண்டிருந்த போது, மாத்தறையிலிருந்து யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று மோதியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here