கிளப் வசந்தவை கொலை செய்தவர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?

0
85

அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாடகர் கே. சுஜீவா மற்றும் நால்வர் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தோடு தொடர்புபட்ட கொலையாளிகள் இருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அவர்கள் தென் கடற்பகுதியில் இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டதாக பல இடங்களில் இருந்து தகவல் கிடைத்த நிலையில் அவ்வாறன இடங்களை பரிசோதித்த பொலிசாருக்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here