சிங்கள மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பும் நோக்கில், செவ்வந்தியை ஒத்த தோற்றமுடைய சாவகச்சேரியை சேர்ந்த தக்சி என்ற பெண்ணை மற்றொரு சந்தேகநபரான சுரேஸ் கண்டுபிடித்திருக்கிறார்.
குறிப்பாக, பிரதான சந்தேகநபரான கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பிரகாரம், சந்தேகநபரான சுரேஷ், செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய, அதுவும் கடவுச்சீட்டு வைத்துள்ள ஒரு இளம் பெண்ணைத் தேடியபோது, தக்சி என்ற இளம் பெண் அவருக்கு கிடைத்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது, தக்சி என்ற பெண்ணிடம் கடவுச்சீட்டு இருந்ததாலும், செவ்வந்தியை ஒத்த தோற்றம் இருந்ததாலும், வெளிநாடு செல்லாம் என்றும், சிங்கள மொழி தெரிய வேண்டும் என்று கூறியும், தக்சி என்ற இளம் பெண்ணை ஏமாற்றி, சுரேஸ் நேபாளத்துக்கு அழைத்துச் சென்றமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான விசாரணையின் அடுத்த கட்டமாக, கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் தடுப்புக் காவலி உள்ள, செவ்வந்தியை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செவ்வந்தி கிளிநொச்சியிலும் மறைந்திருந்தால், மேலதிக விசாரணைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் அங்கு தங்கியிருந்த பகுதிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சியில் தான் தங்கியிருந்து பிரதேசம் மற்றும் வீடு தனக்கு ஞாபகம் இல்லை என செவ்வந்தி முன்னர் இடம்பெற்ற விவசாரணையில் கூறியிருந்தார்.
ஆனாலும் அவர் நேற்று கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றப் பிரிவுக்கு செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரனை செய்ய அனுமதி வழங்கியதன் பிரகாரம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, கணேமுல்லர சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர், அடுத்த சில நாட்டகளில் செவ்வந்தி மறைந்திருந்தாக சந்தேகிக்கப்படும். இடங்களுக்கு அவர் அழைத்து செய்யப்பட்டு, அங்கு வைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வந்தி தங்கியிருந்தாக சந்தேகிக்கப்படும் வீட்டு உரிமையாளர்கள், அல்லது அந்த வீடுகளில் தங்கியிருந்த பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.