குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்திய தொழிற்சங்க ஆதரவாளர்கள் டயகமவில் கைது!

0
129

டயகம பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் விஜயம் செய்தபோது அவரது வருகையால் மகிழ்ச்சிகொண்ட சில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குடிபோதையில் அமைச்சர் திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் புகைப்படம் அடங்கிய நுவரெலியா பிரதேச செயலகத்தால் பொருத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்ட பெயர்பலகையை சேதப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து டயகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். குடிபோதையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியமை மற்றும் அரச சொத்து சேதம் செய்தல் போன்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம் சந்தேகநபர்களை தலா 1 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் வாராந்தம் ஞாயிறு டயகம பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டயகம நிருபர் – நடராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here