குடி நீரில் மண் கலக்கபடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்த தோட்ட மக்கள் – பொகவந்தலாவையில் சம்பவம்!!

0
148

குடி நீரில் மண் கலக்கபடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டமக்கள் ஆர்பாட்டம்.

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டமக்கள் 12.02.2018. திங்கள் கிழமை காலை 08மணியில் இருந்து 09மணி வரை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் .

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் முன்னெடுக்கபடுகின்ற வீடமைப்பு திட்டத்தினால் பெக்கோ இயந்திரம் கொண்டு வெட்டபட்டு குவிக்கபட்ட மண் மழை காலங்களில் கரைந்து கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டமக்கள் குடி நீருக்காக பயன்படுத்தும் குடிநீரில் கலக்கபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர் .

IMG_20180212_084748 IMG_20180212_085429 IMG_20180212_085744 IMG_20180212_083820 IMG_20180212_084711

அத்தோடு குறித்த நீரினை கொண்டு அன்றாடம் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையெனவும் கடந்த 50வருடங்களாக குறித்த நீரினை பயன்படுத்தி வருவதாகவும் இந்த வீடமைப்பு திட்ட ஆரம்பிக்பட்ட பிறகுதான் நாங்கள் அருந்தும் குடிநீரில் மண் கலக்கபடுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு குறித்த வீடமைப்பு திட்டத்தினால் பாதிக்கபட்டுள்ள எங்களுடைய குடி நீருக்கு சம்பந்தபட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர் .

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here